உடலென்ன ?
படம் : அமராவதி
பாடியவர் : அசோக்
இசை : பால பாரதி
உடலென்ன உயிரென்ன
உறவென்ன உலகென்ன
விதியென்ன விடையென்ன மனமேஓடும் நதியெல்லாம் கடலோடு
உடல் எல்லாம் மண்ணோடு
உயிர் போகும் இடமெங்கே மனமேஇந்த வாழ்க்கை வாடிக்கை
வெறும் வாண வேடிக்கை
இன்பம் தேடி வாடும் ஜீவனெல்லாம்
தவிக்குது துடிக்குது !சரணம் - 1
காதலைப் பாடாமல் காவியம் இங்கில்லை…
ஆனாலும் காதல் தான் பாவம்…
ஜாதியும் தான் கண்டு ஜாதகம் கண்டானே
யாரோடு அவனுக்குக் கோபம்….இது சாமி கோபமோ-இல்லை பூமி சாபமோ
ராஜாக்கள் கதை எல்லாம் ரத்தத்தின் வரலாறு
ரோஜாக்கள் கதை எல்லாம் கண்ணீரின் வரலாறுஉறவுக்கும் உரிமைக்கும் யுத்தம்—ஓ…
உலகத்தில் அது தானே சட்டம்..சரணம் - 2
வானத்தின் மேல் நின்று பூமியை நீ பாரு…
மண்ணோடு பேதங்கள் இல்லை
காதலில் பேதங்கள்- காட்சியில் பேதங்கள்
மனிதன் தான் செய்கின்ற தொல்லைஇது பூவின் தோட்டமா - இல்லை முள்ளின் கூட்டமா…
முன்னோர்கள் சொன்னார்கள் அது ஒன்றும் பொய்யல்ல..
மரணத்தைப் போல் இங்கு வேறேதும் மெய்யல்ல..நான் போகும் வழி கண்டு சொல்ல - ஓ…
நான் ஒன்றும் சித்தார்த்தன் அல்ல..