Sunday, February 12, 2006

அன்புள்ள மான் விழியே !


அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்ன வென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதிவந்தேன்
நலம் நலம் தான முல்லை மலரே
சுகம் சுகம் தானா முத்துச்சுடரே
நலம் நலம் தான முல்லை மலரே
சுகம் சுகம் தானா முத்துச்சுடரே
இளையகன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்ன வென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை

நலம் நலம் தானே நீ இருந்தால்
சுகம் சுகம் தானே நினைவிருந்தால்
நலம் நலம் தானே நீ இருந்தால்
சுகம் சுகம் தானே நினைவிருந்தால்
இடை மெலிந்தது இயற்கை அல்லவா
நடை தள்ர்ந்தது நாணம் அல்லவா
வண்ண பூங்கொடி பெண்மை அல்லவா
வாடவைத்ததும் உண்மை அல்லவா
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதிவந்தேன்

Film : குழந்தையும் தெய்வமும்
Song : Anbulla maan
Lyrics : வாலி
Singers : TMS, P Susila
Music : MSV

1 Comments:

Blogger Unknown said...

very good love song at the period when the movie was published. Letter send through the eyes only that means the love

11:30 AM  

Post a Comment

<< Home